கண்களை மூடிக்கொண்டு நெருப்புடன் போராட முடியாது என கொரோனா பரிசோதனையில் மந்த நிலையை கடைபிடிக்கும் நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ், கொரோனா வைரஸ் பரிமாற்ற சங்கிலியை உடைப்பதன் மூலமே உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்றார்.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதன் மூலமே இது சாத்தியமாகும் என்று குறிப்பிட்டுள்ள டெட்ராஸ், பரிசோதனைகளை தீவிரப்படுத்த உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தனி மனித சுகாதார நடவடிக்கைகளை பொதுமக்கள் தீவிரமாக கடைபிடிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.