கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் யூ-டியூப் சேனல் உதவியுடன் வீட்டில் இருந்தபடியே முதியோர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
வயது முதிந்தவர்களையே கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவதால், அவர்களின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், கால்கள், முதுகு தசைகளை வலுப்படுத்தவும் சிறப்பு உடற்பயிற்சி வீடியோக்களை கியூமன் லைப் கேர் என்ற நிறுவனம் யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளது.
அரசின் அறிவுறுத்தலின் படி வெளியே செல்வதை தவிர்த்துள்ள மூத்த குடிமக்கள், வீட்டில் இருந்தபடியோ இந்த வீடியோக்களை பார்த்து பயன்பெற்று வருகின்றனர்.