ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைவீரர்கள் மீதான தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க கூட்டுப் படை முகாம்கள் மீது ஈரான் தொடர் ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகிறது.கடந்த வாரம் பாக்தாத் முகாம் மீதான ஈரான் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்களும் ஒரு பிரிட்டன் வீரரும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் மீண்டும் நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ஈராக் இடைக்காலப் பிரதமர் அடெல் அப்டெல் மாதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூட்டுப் படையினரை காக்க வேண்டிய பொறுப்பு ஈராக் அரசுக்கு இருப்பதை வலியுறுத்தியுள்ளார்.