தனது வீட்டை அடைய 37000 கிலோமீட்டர் பயணம் செய்த ஆமை
மனிதர்களுக்கு வீடு என்பது முக்கியமானதோ அது போல மற்ற உயிரினங்களுக்கும் இன்றியமையாதது. ஆனால் இந்த முறை சோஷியல் மீடியாவில் யோஷி என்ற ஆமை பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.தன் வீட்டை கண்டுபிடிக்க 180 கிலோ எடை கொண்ட ஆமை 37000 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டு இருப்பது வைரலாக பரவி வருகிறது.
தனது கூட்டினை கண்டுபிடிக்க ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பயணம் செய்து இருக்கிறது. லாஹர்ஹெட் இன வகை ஆமை இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதையும் ,மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.அதன் பின் தன்னார்வு அமைப்புகளால் பராமரிக்கப்பட்டு செயற்கை கோள் ஷிப் பொருத்தப்பட்டு கடலில் விடுவிக்கப்பட்டது.இந்த நிலையில் அதனை பின் தொடர்ந்த நிர்வாகம் கிட்டத்தட்ட 37000 கிலோ மீட்டர் பயணித்து தனது உண்மையான இருப்பிடத்தை ஆஸ்திரேலியாவில் கண்டறிந்து இருப்பது அதிசயமாகவும் கருதப்படுவதாக வனத்துறை அதிகாரியான ப்ரவீன் கஸ்வான் ட்வீட் செய்து இருக்கிறார்