உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் உலகம் முழுவதும் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்க நாசா நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. நாசா விண்வெளி வீரர் கிறிஸ் காசிடி மற்றும் ரஷ்ய விண்வெளி வீரரான நிகோலாய் டிகோனோவ் ஆகியோர் அடங்கிய குழு வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி விண்வெளிக்கு பயணிக்க உள்ளனர்.
எனவே விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் உடல்நிலையை பரிசோதிப்பது வழக்கம் வீரர்கள் விண்வெளிக்கு சென்ற பின்னர் அவர்கள் நோய்வாய் படாமல் இருக்க பல கட்ட பரிசோதனைகளை செய்வார்கள்.
தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வீரர்களுக்கு வழக்கமாக செய்யும் பரிசோதனைகளை 15 நாட்களுக்கு முன்கூட்டியே வீரர்களை தனிமைப்படுத்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என பரிசோதனைகளை நாசா மேற்கொண்டு வருகின்றது.
மேலும் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் ரஷ்யாவில் பயிற்சி மேற்க்கொள்வது வழக்கம். அங்கு செல்லும் வீரர்கள் வெளியே செல்ல தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.