கூகுளின் துணை நிறுவனமான, வெரிலி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்துகொள்ள ஏதுவாக தனி வெப்சைட்டை அமெரிக்காவில் துவங்கியுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என கூகுள் விரும்பியது. அதனடிப்படையில், அண்மையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து, அறிவிப்பை வெளியிட்டுருந்தார். அதில், ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளதா? பாதித்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பதை அறிய கூகுள் புதிய வெப்சைட் துவங்குவதாக குறிப்பிட்டார். அந்த வகையில், தற்போது, கூகுளின் துணை நிறுவனமான வெரிலி கொரோனா குறித்த வெப்சைட்டை துவங்கியுள்ளது. தற்போது அமெரிக்கா கலிபோர்னியாவில் மட்டும் துவங்கப்பட்டுள்ள இந்த வெப்சைட்டை பயன்படுத்த, அமெரிக்க குடிமக்களாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை கொண்டுள்ளதாகவும், இந்த விபரங்கள் அரசு துறைகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுசுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள பயோடெக்னாலஜி நிறுவனம், கலிபோர்னியா கவர்னர் அலுவலகம், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த வெப்சைட் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.