அனைவரும் "டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன்" செய்வதே, வைரஸ் பரவலைத் தடுக்க சிறந்த வழி என உலக சுகாதார நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரானா வைரசானது இருமல், தும்மல் போன்றவற்றால், சளி நீர்த்திவலைகள் மூலமே பரவுகிறது. எனவே, ஒருவருக்கொருவர் நெருங்காமல் தூரத்தில் இருப்பதன் மூலம் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.
இருமும்போது அல்லது தும்மும்போது நீர்த் திவலைகள் வெளியே தெறிக்காமல் கைக்குட்டை போன்றவற்றால் மூடிக் கொள்வது, தரை, மேசை உள்ளிட்ட புழங்கும் பரப்புகளை அடிக்கடி துப்புரவு செய்வதும் வைரஸ் பரவலைத் தடுக்கும்.
பல்வேறு நோக்கங்களுக்காக கூட்டங் கூடுவதை தடுப்பதும், வைரஸ் பரவுவதைத் தடுக்கும். கொரானா தொற்று உள்ளவர்களை விரைந்து கண்டறிவது, அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவது, தனிமைப்படுத்துவது, கண்காணிப்பது போன்ற வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.