பிரேசிலில் கொரானா பீதியால் மக்கள் கூட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடத்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர், போராட்டக்காரர்களுடன் செல்பி எடுத்து தனது ஆதரவை தெரிவித்தார்.
அந்நாட்டில் கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ள நிலையில், சில மாநிலங்களில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை தள்ளிப்போடும் அதிபர் போல்சனாரோயின் அறிவுறுத்தலை மீறி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை கண்டித்து ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்தில் பிரேசிலிய கால்பந்து ஜெர்சி உடையுடன் அதிபர் போல்சனாரோ பங்கேற்றார்.