கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்தின் சோதனை அமெரிக்காவில் இன்று தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் கொரோனாவிற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், வாஷிங்டனில் உள்ள சுகாதாரத்துறை அராய்ச்சி நிறுவனம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்திற்கான சோதனை இன்று தொடங்க உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான 45 தன்னார்வலர்களை கொண்டு இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், மருந்து ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதை ஆராய்ந்து அதன்மூலம் அடுத்த கட்ட சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.