அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக நாடுகளைக் கொரானா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள், தலைவர்கள் கூடக் கொரானா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பிரேசில் அதிபர் மற்றும் அவருடன் வந்தவர்கள் புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பைச் சந்தித்துப் பேசினர்.
அவர்களில் சிலருக்கு கொரானா பாதிப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதனால் டொனால்டு டிரம்புக்கு கொரானா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் டிரம்புக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் சீன் கோன்லீ தெரிவித்துள்ளார்.