அமெரிக்காவில் கொரானாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்திருக்கிறது.
கொரானா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2600 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரானாவால் பாதிக்கப்படாத மாநிலமாக இருந்த விர்ஜினியா மாகாணத்திலும், அந்த தொற்றுநோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல்களை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், சீனாவில் இருந்து, தங்கள் நாட்டிற்கு கொரானா வந்திருப்பதாக கூறினார்.
ஆனாலும் இது யாருடைய தவறும் இல்லை, யார் மீதும் பழி போட வேண்டியதில்லை என்று கூறிய டிரம்ப் இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றார்.
கொரோனாவை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் விரைவில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே டிரம்ப்புக்கு கொரானா தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.