சென்னையில், பொது இடங்களில் அடுத்த 15 நாட்களுக்கு முன் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்த காவல் துறை சார்பில் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், மார்ச் 14 ஆம் தேதி முதல் வருகிற 29ஆம் தேதி வரை, பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பொது இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி, உண்ணாவிரதம் உள்ளிட்டவை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடத்துவதாக இருந்தால், 5 நாட்களுக்கு முன்பாக முன் அனுமதி பெறவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.