வரலாற்றில் முதல்முறையாக விவாகரத்து வழக்குகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் என இங்கிலாந்து நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நீதித்துறை நடவடிக்கைகள் குறித்த பொதுமக்களின் புரிதலை அதிகரிக்கும் வகையில், வழக்கு விசாரணை நீதித்துறை இணையதளம், பேஸ்புக், யூட்யூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஒளிபரப்படும் என்றும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பிற்கு ஆட்சேபம் தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், நேரலையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்படுவார்கள் என்றும், வழக்கில் தொடர்புடைய தம்பதியர் காட்டப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகுந்த சர்ச்சைகுரிய வழக்குகளில் மனுதாரர்களின் பெயர்களை குறிப்பிடுவதை தவிர்க்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.