சிலி தலைநகர் சான்டியாகோவில் அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினர் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
பேருந்து கட்டண உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலியில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது. சான்டியாகோவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டோர் திடீரென பாதுகாப்புப் படையினர் மீது கற்கள் மற்றும் பாட்டீல்களை வீசினர்.
பதிலுக்கு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன், தண்ணீரையும் பாதுகாப்புப் படையினர் பீய்ச்சி அடித்தனர். இதனால் அப்பகுதியே போர்களம் போல காட்சியளித்தது.