மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அந் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் இருந்து விலகியுள்ளார்.
தமது நேரத்தை கூடுதலாக அவர் சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கிய சர்வேதச பிரச்சினைகளில் கவனம் செலுத்த உள்ளதாக மைக்ரோ சாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆயினும் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் முக்கிய தொழில்நுட்ப ஆலோசகராக அவர் நீடிப்பார் என்று அந்நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாடெல்லா தெரிவித்துள்ளார். 1975ம் ஆண்டு பில்கேட்சும் பால் ஆலனும் இணைந்து மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை நிறுவினர்.
இந்நிறுவனத்தின் சிஇஓவாக பில்கேட்ஸ் இரண்டாயிரமாவது ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். மைக்ரோ சாப்ட் போர்டு ஆப் டைரக்டர்கள் குழுவில் இருந்து பில்கேட்ஸ் விலகியதைத் தொடர்ந்து அதில் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள்.