மெக்சிகோவில் கொரானா வைரஸ் போன்று உடையணிந்து பள்ளி மாணவர்கள் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஒகாம்போ (Ocampo) 2020 என்ற பெயரில் நடைபெற்ற திருவிழாவில் கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நோய் பரவல் குறித்த அச்சத்தை போக்கும் விதமாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அதில் கொரானா வைரஸ் போன்று வேடமணிந்திருந்த குழந்தையை சுற்றி நடனமாடிய மருத்துவர் மற்றும் செவிலியர் உடையணிந்த குழந்தைகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.