கொரோனா தடுப்பில் அசத்தும் ருவாண்டா நாடு
கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகின்றது. அந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நாடுகளும் பல வழிமுறைகளை கையாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் பேருந்து நிலையம் , ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மக்கள் தங்கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்வதற்காக சிறியரக வாஷ் பேசின்களை வைத்திருக்கிறது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லையென்றாலும் அவர்கள் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைவரும் பாராட்டக்கூடிய விதத்தில் உள்ளன.