கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஏப்ரல் மாதத்தில் 23 ஆயிரம் விமான சேவைகளை ரத்து செய்வதாக லுப்தான்சா விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்பாராத நிலைமையால் 50 சதவீத விமானப் போக்குவரத்தை ரத்து செய்வதாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 28ந் தேதி வரை சுமார் 7 ஆயிரத்து 100 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்பதிவுகளில் ஏற்பட்ட சரிவும் இதற்கான காரணமாக கூறப்படுகிறது. பயணிகள் பயணத்தைத் தொடங்கும் முன்பு விமானத்தின் ஸ்டேட்டசை சரிபார்த்துக் கொள்ளுமாறும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.