அமெரிக்காவில் நியூயார்க் நகரில் கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் போக்குவரத்து நெரிசலின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய நியூயார்க் கவர்னர் ஆன்ட்ரூ கியூமோ, நியூ ரோசிலி பகுதியில் கொரானா வைரசுக்கு இதுவரை 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். மேலும் இந்த பகுதிக்கு தேசிய பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் மற்றும் இங்கு வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.