மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்டா ரிக்காவில் 3டன் அளவுள்ள கொகைன் போதைப் பொருளை அந்நாட்டின் கடற்படையினர் கைப்பற்றி உள்ளனர். கொலம்பியாவில் இருந்து கரிபீயன் கடல் பகுதியாக படகு மூலம் இந்த போதைப் பொருள் கடத்த வரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கொலம்பியாவைச் சேர்ந்த 3 பேரும், நிகராகுவாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடத்தல் தொடர்பாக 4 பேரிடமும் கடற்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.