கொரானா வைரஸ் தொடர்பான எந்த சோதனையையும் தாம் மேற்கொள்ளவில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் பேசிய அவர், இந்த வைரஸ் தொடர்பான எந்த அறிகுறியும் தம்மிடம் தென்படவில்லை என்றார். மேலும் வெள்ளை மாளிகையில் உள்ள மருத்துவர் பரிசோதனை செய்துள்ளதாக தெரிவித்த டிரம்ப் எனவே தாம் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.