கலை மீதான ஆர்வத்தை எந்த நிலையிலும் கட்டிப்போட தேவையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஜப்பான் வீல் சேர் நடன கலைஞர் தனது மெய்சிலிர்க்க வைக்கும் நடனத்தால் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார்.
34 வயது கணினி பொறியாளரான கென்டா கம்பாரா, பிறந்தபோதே முதுகெலும்பு கோளாறுடன் பிறந்ததால் இருகால்களையும் அசைக்கமுடியாது. இருந்தபோதும் தன்னம்பிக்கை தளராத கென்டா, கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியின் பயனாக வீல் சேருடன் நடனமாடி அசத்தி வருகிறார்.
2016 ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்கின் நிறைவு விழாவில் நடனம் ஆடி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கென்டா, டோக்கியோ பாராலிம்பிக் தொடக்க, நிறைவு நிகழ்ச்சிகளில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.