ஜப்பானில், கொரானா நோய்தொற்றை பரப்பும் மையங்களாக இசைநிகழ்ச்சி கூடங்கள், திகழ்வது கண்டறியப்பட்டிருக்கிறது.
இதனால், அந்த மியூசிக் கிளப்புகளுக்கு சென்று வந்தவர்கள், தங்கள் பகுதியில் உள்ள கொரானா பரிசோதனை மையங்களுக்கு உடனடியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரானா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, இசை கிளப்புகளில், அதிகளவில் கூட்டம் கூடக் கூடாது என ஒசாகா நகர நிர்வாகம், கண்டிப்புடன் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒசாகா நகரில் மட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமைக் கணக்குபடி, 55 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில், 49 பேர், இந்த இசை கிளப்புகளுக்கு சென்று வந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.