மெக்சிகோவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி 2வது நாளாக நூற்றுக்கணக்கான பெண்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பல பள்ளிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கடந்த 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்கள் இல்லாத ஒருநாள் என்ற தலைப்பில் தொடங்கிய போராட்டம், நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பரவியது. இதன் தொடர்ச்சியாக நேற்றுமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் பெண்கள், வீதிகளில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மெக்ஸிகோவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 10 பெண்கள் வரை கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட பெண்ணியவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெண்கள் கொல்லப்படுவதை கண்டித்து நடக்கும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு 67 சதவீத பெண்கள் ஆதரவு அளித்துள்ளனர்.