ஈரானில் கொரானா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் என்ற வதந்தியை நம்பி, கள்ளச்சாராயம் அருந்திய 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரானா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில், மது அருந்துவதன் மூலம் கொரானா பாதிப்பை குணப்படுத்தலாம் என வதந்தி பரவி வருகிறது.
அதனை நம்பி குசஸ்தான் மாகாணத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 218 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 22 பேர் பலியாகியுள்ளனர்.
அதே போல் அல்போர்ஸ் பிராந்தியத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் இஸ்லாமியரல்லாத பிற மதங்களை சேர்ந்த சிறுபான்மையினரை தவிர்த்து, மற்றவர்கள் அனைவரும் மது அருந்துவது தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.