கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிலிப்பைன்சின் சில பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுவரை 10 பேருக்கு கொரானா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரானா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அந்த வகையில், சான் ஜுவான் நகரில் உள்ள அரசு மற்றும் பொது பள்ளிக்கூடங்களில், வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில், கொரானா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன.