கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க ஈரான் நாட்டின் சிறைகளில் இருக்கும் 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஈரானில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 49 பேர் இறந்து உள்ளனர். மேலும் அந்நாட்டில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவுவதால் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பரவக்கூடாது என்பதற்காக 70 ஆயிரம் கைதிகளை விடுவிக்கிறது அந்நாட்டு அரசு.
இந்த அறிவிப்பை ஈரான் நாட்டின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி வெளியிட்டார் அதில் ”கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் அதிகமாக இருப்பதால் சிறையில் இருக்கும் கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களை தற்காலிகமாக விடுவிப்பதாக அறிவித்தார். மேலும் கைதிகளை விடுவிப்பதால் நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தொடர்ந்து கவனிக்கும் என்றும் குறிப்பிட்டார்.