கொரானா வைரஸ் பீதி முட்டாள்தனமானது என டெஸ்லா சிஇஓ எலோன் மஸ்க் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரானா வைரஸ், சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், கொரானா வைரஸ் பீதி முட்டாள்தனமானது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஏழைகளின் துயரம் பில்லியனர்களுக்கு முட்டாள்தனமாகத்தான் தெரியும், பில்லியனராக இருந்து கொண்டு இவ்வாறு சொல்வது எளிது, கம்பெனி வருமானத்தை பாதித்து விட்டதால் எரிச்சலில் எலோன் மஸ்க் இவ்வாறு கூறுகிறார் என ஏராளமானோர் கண்டித்தும் கிண்டலடித்தும் பதிவிட்டு வருகின்றனர்.