சவூதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக அரசக் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு இளவரசர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியா மன்னர் சல்மானின் மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் ஆட்சி அதிகாரத்தை கவனித்து வருகிறார். இந்த நிலையில் அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக மன்னர் சல்மானின் இளைய தம்பி அகமது பின் அப்துலாஜிஸ், முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீப், அவரது சகோதரர் நவாஃப் பின் நயீப் ஆகியோர் 2 தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ராணுவ முன்னாள் புலனாய்வுத் தலைவரான இளவரசர் நயீப் பின் அகமது(Nayef bin Ahmed) கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.