கொரோனா பாதிப்பு தொடர்பாக முகக்கவசம் தொடர்பாக முகநூலில் விளம்பரம் செய்வதற்கு அந்த நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது.
கொரோனா தொற்றினைத் தடுக்க முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பல நாடுகளில் முகக்கவசங்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரபல சமூக வலைத்தளமான முகநூலில், மக்களின் அச்சத்தை பயன்படுத்தி வணிகர்கள் சிலர், லாப நோக்கத்தில் முகக்கவசம் விற்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக முகநூல் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா தொடர்பாக உலகம் முழுவதும் நிலவி வரும் அச்சத்தை பயன்படுத்தி சிலர் விளம்பரம் தொடர்பான விதிகளை மீறி வருகின்றனர்.
எனவே மருத்துவ முகக்கவசங்களை விளம்பரப்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.