இங்கிலாந்தில் வெள்ளச் சேதங்களைப் பார்வையிடச் சென்ற அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனை பொதுமக்களில் ஒருவர் துரோகி என விமர்சித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் கடந்த மாதம் புயல் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று பார்வையிடச் சென்றார். அப்போது 22 நாட்களுக்குப் பின்னர் அவர் வந்ததால் ஆத்திரமடைந்த ஒருவர் துரோகி... துரோகி.... என சப்தமிட்டுக் கொண்டே இருந்தார்.
இதனைக் கண்ட போரிஸ் ஜான்சன் அங்கிருந்து சென்றார். இந்தச் சம்பம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.