சிரியாவில் எரிபொருள் லாரியும், பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் டாமாஸ்கசையும், ஹான்ஸ் என்ற இடத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியில் பிரேக் பிடிப்பதில் பழுது ஏற்பட்டதால் நிலைதடுமாறி தறி கெட்டு ஓடியது.
அப்போது அதே வழியாக வந்த இரண்டு சுற்றுலா பேருந்துகளின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 வாகனங்களும் கடுமையாகச் சேதமடைந்தன. இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த 32 பேர் உயிரிழந்தனர். மேலும் 77 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய பேருந்து இரண்டு துண்டாக உடைந்தது.