இந்தோனேசியாவில் போலி முககவசங்கள் தயாரித்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு முககவசங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
இதனை பயன்படுத்தி சிலர் அதிக விலைக்கு முககவசங்களை விற்பது, போலி முககவசங்கள் தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தோனேசியாவின் பாலி, ஜகார்த்தா உள்ளிட்ட இடங்களில் முககவசங்கள் பதுக்கல், போலி முககவசங்கள் தயாரிப்பு குறித்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மருந்தகங்கள், குடோன்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த போலீசார், போலி முககவசங்கள் தயாரித்தவர்களையும் கைது செய்தனர்.