சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உலகமெங்கும் உள்ள மகளிரை தனது டூடுல் மூலம் கூகுள் நிறுவனம் கவுரவித்து உள்ளது.
அனிமேஷன் மூலம் பல தலைமுறைகளைச் சேர்ந்த பெண்மணிகளின் சமூதாய பங்களிப்பை பிரதிபலிக்கும் வகையில் 3 அடுக்கு 3டி பேப்பர்களை உருவாக்கி டூடுள் வீடியோ வெளியிட்டுள்ளது.
வீடியோவில், மையத்தில் உள்ள அடுக்கு 1800களில் இருந்து 1930 வரை தொழிலாளர் இயக்கங்களில் பெண்களின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது. 2வது அடுக்கு 1950 முதல் 1980களில் பாலின சமத்துவத்தில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கிறது. கடைசி அடுக்கு 1990களில் இருந்து இன்று வரை பெண்ணுரிமையின் பரிணாம வளர்ச்சியை அடையாளப்படுத்துகிறது.