செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அதிபர் டிரம்ப் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்டவருக்கு கொரானா

Mar 08, 2020 06:51:53 PM

அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியில் கொரானா வேகமாக பரவி வருவதையடுத்து, வெனிஸ், மிலன் உள்ளிட்ட நகரங்கள் அடங்கிய பிராந்தியங்களை தனிமைப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவில் கொரானா வைரஸ் பாதிப்பால் மேலும் 27 பேர் பலியாகியுள்ளனர். இதனால் சீனாவில் கொரானாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3,097ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் தென்கொரியாவில் 2 பேர் உயிரிழந்ததால், அந்நாட்டில் கொரானாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. இதையும் சேர்த்து, உலகில் கொரானாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3,600 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர்த்து, சீனாவில் 43 பேர், தென்கொரியாவில் 93 பேர், அமெரிக்காவில் 7 பேர், ஆஸ்திரேலியாவில் 3 பேர், வியட்நாம் மற்றும் மெக்சிகோவில் தலா ஒருவர், கோஸ்டா ரிகா நாட்டில் 4 பேருக்கு கொரானா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் உலகில் கொரானா பாதித்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 203ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் புதிதாக கொரானா பாதித்த 7 பேரையும் சேர்த்து மொத்த எண்ணிக்கை 442ஆக உயர்ந்துள்ளது. இதில் நியூயார்க் மாகாணத்தில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வாஷிங்டன் அருகே கடந்த மாதம் நடைபெற்ற பழமைவாத அரசியல் நடவடிக்கை குழு மாநாட்டில் (Conservative Political Action Conference) அதிபர் டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்ற ஒருவருக்கு கொரானா உறுதியாகியுள்ளது. தற்போது அவர் நியூஜெர்சி மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், விமான நிலையங்களில் பரிசோதனையில் ஈடுபட்ட 2 பேருக்கு கொரானா பரவியதால் விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டு வருவோர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதையடுத்து சக்திவாய்ந்த முககவசங்களை வழங்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, எகிப்து நாட்டில் நைல் நதியில் 150 சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 171 பேருடன் வந்த சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 10 வெளிநாட்டு பயணிகள் உள்ளிட்ட 45 பேருக்கு கொரானா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதையடுத்து லக்சர் (Luxor) நகரின் தெற்கு பகுதியில் அக்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் 45 பேரும், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தனிமை வார்டில் கண்காணிக்க எகிப்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இத்தாலியில் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், மிலன் நகரத்தை சுற்றியுள்ள ஒட்டுமொத்த லொம்பார்டி  (Lombardy) பிராந்தியத்தையும்,  வெனிஸ், பார்மா, ரிமினி நகரங்கள் அடங்கிய வெனிடோ பிராந்தியத்திலுள்ள  (Veneto region ) சில பகுதிகளையும் சீலிட்டு தனிமைப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 3ம் தேதி வரையிலும் அப்பிராந்தியங்களில் இருந்து மக்கள் வெளியேறவும், பிற பகுதிகளில் இருந்து அங்கு வரவும் கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியின் வர்த்தக தலைநகராக கருதப்படும் மிலனில் சுமார் 14 லட்சம் பேர் (1.4 million) வாழ்கின்றனர். இதையும் சேர்த்து ஒட்டுமொத்த லொம்பார்டி பிராந்தியத்தில் சுமார் 1 கோடி பேர் (10 million) வசிக்கின்றனர். வெனிடோ பிராந்தியத்தில் சுமார் 6 லட்சம் பேர் வாழ்கின்றனர். இத்தாலி அரசின் நடவடிக்கையால், அவர்கள் அங்கேயே முடங்கும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

21 பயணிகளுக்கு கொரானா வைரஸ் தொற்று பாதித்து, சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் இருந்து 50 மைல் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள  Grand Princess சொகுசு கப்பலை நாளை ஆக்லாந்து துறைமுகத்தில் கொண்டு சென்று நிறுத்துமாறு அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

3500 பேருடன் பயணித்த இந்த கப்பலில் முன்னர் பயணித்த நபர் ஒருவர் கொரானா பாதித்து மரணமடைந்தார். இதை அடுத்து கலிபோர்னியா கடற்பகுதியில் நிறுத்தப்பட்ட இந்த கப்பலில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் கொரானா சோதனைக் கருவிகளை போட்டன.அதில் நடத்தப்பட்ட சோதனையில் தொற்று பரவியது உறுதியான நிலையில், ஆக்லாந்து துறைமுகத்தில் கப்பலை கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. 

இத்தாலியில் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அந்நாட்டின் வடபகுதி முழுவதையும் சீலிட்டு தனிமைபடுத்த  பிரதமர் கியோசெப் கோன்ட் (Giuseppe Conte) ஒப்புதல் அளித்துள்ளார்.

சீனாவுக்கு அடுத்து இத்தாலியில்தான் கொரானா வைரஸால் அதிகம் பேர் பலியாகியுள்ளனர்.. இதை கருத்தில் கொண்டு, கொரானா பாதிப்பு இருக்கும் லொம்பார்டி பிராந்தியம் முழுவதையும்  சீலிட்டு தனிமைபடுத்த பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி, அப்பிராந்தியத்திலுள்ள 14 மாகாணங்களில் இருக்கும் பள்ளிகள், பல்கலைகழங்கள் ஏப்ரல் 3ம் தேதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதுடன், பொதுமக்களின் நடமாட்டத்துக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


Advertisement
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது
ஷானியா ட்வைன் பாடல்களால் ஈர்க்கப்பட்ட நாயின் நுரையீரலில் இருந்த 5 செ.மீ புல்
ரஷ்ய தலைநகரம் மாஸ்கோ மீது மீது 30 டிரோன்கள் தாக்கியதில் கட்டடங்கள், வாகனங்கள் சேதம்
ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்ற செயல் - அதிபர் புதின்
பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற டிரம்ப் திட்டம்..
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் சாகச வீரர் விபத்தில் உயிரிழப்பு..
தெற்கு கரோலினாவில் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகள்... தேடுதல் வேட்டையில் 2,000 ஊழியர்கள்
அமெரிக்கா சாலைகளில் பனி மூடியதால் வாகனப் போக்குவரத்து நிறுத்தம்
கியூபாவில் ரபேல் புயல் தாக்கியதில் கடும் சேதம்
அமெரிக்கா கலிபோர்னியாவில் 14 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீ

Advertisement
Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!


Advertisement