கொரானா வைரசை தடுக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என, சீன பிரதமர் லீ கெக்கியாங் அறிவுறுத்தியுள்ளார்.
அந்நாட்டில் மட்டும் கொரானா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள விமான நிலையத்தில் சீன பிரதமர் லீ கெக்கியாங் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், கொரானா வைரசை சமாளிப்பது என்பது சர்வதேச நாடுகளுக்கான பொதுவான சவால் என தெரிவித்தார். மேலும், மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் முயற்சிகள் தேவை என்றும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக திறமையான மற்றும் நிலையான சேவையை வழங்க, சர்வதேச சரக்கு விமான சேவை முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்