அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் சூறாவளி தாக்கியதால் பெரும் சேதத்தை சந்தித்த இடங்களை அதிபர் டிரம்ப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து தாக்கிய சூறாவளியால் டென்னிசி பகுதி சின்னாபின்னாமாக காட்சியளிக்கிறது. அங்குள்ள ஏராளமான வீடுகளின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டு கிடக்கின்றன.
அந்த பகுதியை அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரில் பார்வையிட்டார். இதேபோல் சூறாவளி காற்றால் வீடுகளை இழந்தோரையும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் உள்ளிட்டோரையும் டிரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.