இலங்கை தலைநகர் கொழும்புவில் குடியிருப்பு பகுதியில் கொரானா சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை நாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கிருந்த திரும்பும் மக்களுக்கு கொரானா தொற்று உள்ளதா என்பதை பரிசோதிக்கும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் கொழும்பு சர்வதேச விமானநிலையம் அருகே தொழுநோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
மக்கள் அதிகம் உள்ள இடத்தில் பொருத்தமற்ற சூழலில் கொரானா சிறப்பு முகாம் அமைக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர்.