பாகிஸ்தானின் கராச்சி நகரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 11பேர் உயிரிழந்தனர்.
மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 7 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மூவர் ஆவர். விபத்து பற்றி தகவல் அறிந்த தும் மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்த தற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.