கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய பொருளாதார நிலைமையில் கடும் சரிவு காணப்படுகிறது.
மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.இதனால் உலகப் பொருளாதார வளர்ச்சி 50 சதவீதம் வரை குறைந்துவிடும் என்று வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏராளமான நாடுகள் இந்த ஆண்டு பொருளாதார சரிவைக் கண்டுள்ளதால் மிகப்பெரிய கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நோயின் தாக்கம் காரணமாக பாதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டு அசுர பொருளாதார வளர்ச்சி என்ற கனவுகளையும் இலக்கையும் கொரோனா வைரஸ் தகர்த்து விட்டதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
189 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் மூன்றில் ஒரு பங்கு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கொரோனா பாதிப்பால் சரிந்து வருகிறது.