அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் கட்சித் தேர்தலில், பல மாநிலங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.
செவ்வாய் அன்று கட்சி உறுப்பினர்கள் பங்கேற்ற தேர்தலில் விர்ஜீனியா, நார்த் கரோலினா, அலபாமா, ஒக்லஹாமா,டென்னிசீ, அர்கன்சாஸ், மின்னோசிட்டா உள்ளிட்ட மாநிலங்களில் ஜோ பிடன் முன்னிலை பெற்றார். அவரது போட்டியாளரான பெர்னி சான்டர்சுக்கு இது ஏமாற்றமளித்தாலும், பெரிய மாநிலங்களான டெக்சாஸ், கலிபோர்னியா உள்ளிட்டவற்றில் அவருக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்சித் தேர்தலை ஒட்டிய பிரச்சாரத்தில் அதிபர் டிரம்பின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த பெர்னி சான்டர்ஸ், அவரை அமெரிக்க வரலாற்றின் மிகவும் அபாயகரமான அதிபர் என்றார்.