கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரை சதவீத புள்ளி விகிதம் வட்டியை குறைப்பதாக அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பொருளாதார நிலைக்கு வைரஸ் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழலைத் தவிர்க்க வட்டியை குறைப்பதாக அந்த வங்கியின் கமிட்டி அறிவித்துள்ளது.
இதே போன்று இந்தியாவில் கடந்த ஏழு நாட்களாக பங்குச் சந்தையில் காணப்பட்ட சரிவு ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அளித்த உத்தரவாதத்தையடுத்து நேற்று மும்பை பங்குச் சந்தையில் ஏறுமுகம் காணப்பட்டு 480 புள்ளிகளை தொட்டது.
உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளிலும் பொருளாதார வர்த்தகத்திலும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை போக்க சீனா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளின் வங்கிகளும் வட்டி விகிதகங்களைக் குறைத்துள்ளன.
ஜி 7 நாடுகளைச் சேர்ந்த நிதியமைச்சர்கள், வங்கி ஆளுநர்கள் அதிகாரிகள் இன்று இப்பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.