அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரின் 11 மாடி கட்டடம் திடீரென சாய்ந்த நிலையில் பீதியைக் கிளப்பி வந்தது. இதையடுத்து அந்த கட்டடம் திங்கட்கிழமையன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டதில் மண் குவியலாக சரிந்து விழுந்தது.
இதில் யாருக்கும் காயமில்லை. இரண்டு வாரங்களாக அதனை தகர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. உயரமான கிரேன் மூலமாக அதன் கோபுரத்தை இடிக்க முயன்றனர். இறுதியாக வெடி வைக்கப்பட்டு அந்த 11 மாடிக் கட்டடம் தூள் தூளாக சிதறி விழுந்தது.
உடைந்த இடிபாடுகளை அகற்ற இரண்டு வார காலமாகலாம் என்று கட்டுமான நிறுவனத்தினர் தெரிவித்தனர்.