துருக்கிக்கு மனிதாபிமான உதவிகளுடன், ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் வழங்கத் தயாராக இருப்பதாக அந்த பிராந்தியத்திற்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ரஷ்யா ஆதரவுபெற்ற அரசுப்படைக்கும், துருக்கி ஆதரவுபெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.
இட்லிப் ((IDLIB)) பகுதியில் சிரியாவுக்கு சொந்தமான போர் விமானத்தை துருக்கி படைகள் சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி கொடுக்க சிரியா அரசுப்படை தயாராகி வருகிறது. இந்நிலையில், துருக்கிக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.