இஸ்ரேலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது.
120 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள், எண்ணும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சிக்கும், பென்னி கான்ட்ஸ்ட்சின் புளு அண்ட் ஒயிட் கட்சிக்கும் இடையே கடும் பலப்பரீட்சை நிலவுகிறது. 90 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரும், நெதன்யாகுவுக்கு, இன்னும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனவே, உதிரி கட்சிகளின் உதவியுடன் நெதன்யாகு, மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10 மாதங்களில் மட்டும், இஸ்ரேலில் 3 முறை பொதுத்தேர்தல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.