துருக்கி ஆதரவு கிளர்ச்சி குழுக்களிடம் 4 நாளுக்கு முன்பு இழந்த பகுதியை சிரியா அரசு படை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
இட்லிப் மாகாணத்திலுள்ள சராகெப் நகரை (Saraqeb) சிரியா அரசு படை வசமிருந்து துருக்கி ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் 4 நாள்களுக்கு முன்பு கைப்பற்றின. இந்நிலையில், அந்நகரிலுள்ள கிளர்ச்சி குழுக்கள் மீது ரஷ்ய விமானப்படை தாக்குதல் தொடுக்க, அதன் பின்னணியில் சிரியா அரசு படையினர் முன்னேறினர்.
இருப்பினும் அந்நகரை விட்டு வெளியேறிய கிளர்ச்சி குழுக்கள், மீண்டும் அதை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதனால் சராகெப் நகருக்கு வெளியே இருதரப்புக்கும் இடையே தீவிர சண்டை நடைபெறுகிறது.