போப் ஆண்டவர் பிரான்சிஸ்-ற்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
கடந்த புதன் அன்று ரோம் புனித பீட்டர் சதுக்கத்தில் மக்களோடு அவர் உரையாடுகையில், இருமல் மற்றும் ஜலதோஷம் போன்றவற்றால் பாதிப்படைந்தவராக காணப்பட்டார்.
இதை அடுத்து அதற்கு அடுத்த நாள் போப் ஆண்டவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு அவர் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு கொரானா தொற்று ஏதும் இல்லை என வாட்டிகன் வட்டாரத்தை சுட்டிக்காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.