இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் மெராபி எரிமலை வெடித்து அதிகளவில் சாம்பல் பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோலோ நகர விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
ஜாவா தீவில் அமைந்துள்ள அந்த எரிமலையில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட வெடிப்பால், வானுயர அளவிற்கு புகையானது தொடர்ந்து வெளியேறி வருகிறது. அதேசமயம், சுற்றுவட்டாரத்தில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை அதன் சாம்பல் பரவி வருவதால பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த எரிமலையில் நிலவும் சூழல் மற்றும் நில அதிர்வுகள் தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.