பருவ நிலை ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க்கை பாலியல் ரீதியில் இழிவுபடுத்தும் விதமாக புகைப்படம் வெளியிட்டதற்கு கனடா ஆயில் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கிரெட்டா, உலகளவில் அதிக ஆதராவளர்களை கொண்டுள்ளபோதும் தனது சமரசமற்ற அணுகுமுறையால் பல எதிர்மறை விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறார்.
அந்தவகையில்,17 வயது கிரெட்டாவை உருவகப்படுத்தும் வகையில் ஆடையில்லா பெண்ணின் பின்பக்க ஓவியத்தை கனடாவைச் சேர்ந்த எக்ஸ் சைட் எண்ணெய் நிறுவனம் வெளியிட்டது.
இதற்கு பல்வேறு கண்டங்கள் எழுந்த நிலையில், தனது தவறை திருத்திக்கொள்வதாக மன்னிப்பு கோரிய எண்ணெய் நிறுவனம், சர்ச்சைக்குரிய புகைப்படத்தை பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.