யுனிசெப் (UNICEF) மற்றும் சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட மருத்துவ உதவிகள் ஈரான் வந்தடைந்துள்ளது.
சீனாவுக்கு அடுத்தப்படியாக ஈரானில் கொரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை இந்த வைரஸால் ஆயிரத்து 501 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் 66 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஈரானுக்கு உதவும் வகையில் சீனா மற்றும் யுனிசெப்பில் இருந்து முகமூடிகள், கவுன்கள், மருத்துவத்துக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. அவை தற்போது ஈரான் தலைநகர் டெக்ரான் வந்தடைந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பை சேர்ந்த ஒரு குழுவினர் ஈரானுக்கு வர இருப்பதாகவும், அவர்கள் அந்நாட்டின் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதுடன், இந்த வைரஸ் பாதித்த நோயாளிகளுக்காக மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்ட வசதிகள், ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றையும் பார்வையிட உள்ளனர்.